Friday, December 20, 2013

918.சிவப்பு கன்னம்







 நீ.....
தவறே செய்யவில்லை
என்றாலும்  !
 உன்னோடு...
அடிக்கடி  சண்டையிடுகிறேன் !

கோபத்தில் சிவக்கும்  !
உன்....
"கன்னத்தின்" அழகை ரசிக்க

Tuesday, December 17, 2013

903.எப்போதும்




                                           எத்தனை முறை...

 நீ....
என்னை வெட்டினாலும் !

நான்...
மீண்டும் வளர்வேன் !

உன்...
விரலில் நகமாய் !

Tuesday, December 3, 2013

904.அன்புடன்




 

நான்...
உனக்காக கொடுத்த 
பரிசுக்கு... 
மதிப்பு கூடியது ! 

அதை... 

பத்திரமாக வைத்திருந்து 
என்னிடம்....
நீ காட்டிய  போது  ! 

Monday, December 2, 2013

905.உன் கையில் நான்

என்....
கைகளை பிடித்துக்கொண்டு 
நீ.... 
நடக்கும்பொழுது !

என்.. 
கால்களுக்கோ !

எந்த திசையில் போகிறோம் 
என்பதே தெரியவில்லை 

கண்களுக்கோ.. 

இது கனவில்லை !
என்பதை உறுதி செய்ய 
இமைகளும்... 
அடிகடி தொட்டுக் காட்டுகிறது ! 

இதயமும்.. 

சற்று வேகமாகவே  
துடிக்க ஆரம்பித்து விடுகிறது!

ஆனால்... 

இந்தக் குழப்பமெல்லாம் !

என்... 
கைகளுக்குக் கிடையாது ! 

ஏனென்றால்.... 

அதுதான்

" சொர்க்கத்தில் " இருக்கிறதே !

Sunday, December 1, 2013

906.நிலா

என்னை விட்டு
நீ...
தொலைவில் இருந்தாலும்

இருட்டின்....
பயத்தை போக்கிவிட்டாய் !

பௌர்ணமி வெளிச்சத்தில்
"நிலா"