Monday, February 21, 2011

976.இறைவன் சொற்படி!


நோக்கம் ஒன்றே எல்லோருக்கும்
"பணம் சம்பாதித்தால் நல்லாயிருக்கும் "
செல்லும் நாட்கள் இப்படியே !
எல்லாம் இறைவன் சொற்படியே ! .

Thursday, February 17, 2011

977.யார் அவள்?

"முதல் பார்வையில்
என்னை மூழ்கடித்தவள் !
முன்னிரவில் முணுமுணுக்கச் செய்தவள் !
கொஞ்சும் பேச்சில் கொள்ளையடித்தவள்  !
செல்லச் சிரிப்பில் சினுங்குபவள் !
அவள்தான் -ஆமாம் 
அவளேதான் !

என் அக்காள் மகள் "அனிதா  "
வயது "இரண்டு"  "