Thursday, November 25, 2010

987.ஓரப்பார்வை

"அரை சொர்க்கம் அரை நரகம் 
நீ ஓரப்பார்வை பார்க்கும்போது "

988.இரவல்

"இன்றிரவு எனக்கு தூக்கமில்லை 
என்னை கடந்து சென்றவள் 
இரவல் வாங்கிச் சென்றுவிட்டாள் 
என் தூக்கத்தை"  

Wednesday, November 24, 2010

989.கோரிக்கை

நிலவே முகம் காட்டு -இது
இந்த சூரியனின் ஆசை .

Tuesday, November 23, 2010

990.போட்டி

"சாலையோர பூக்களுக்குள் 
உன்னால் சண்டை 
யாரை நீ முதலில் பார்த்தாய்? என்று"    

Monday, November 22, 2010

991.கனவில்

"என் உயிரோடு உணர்வோடு
கலந்த அவள்!
கனவோடு இருக்கிறாள் 
வடிவம் பெறாத உருவமாய்   "

Saturday, November 20, 2010

992.காதலில்

"கத்தியும் இல்லை
ரத்தமும் இல்லை-ஆனால்
உயிர் மட்டும் போகிறது
இந்த காதலில்"

993.நீண்ட பட்டியல்

அவன் ஏன் அப்படி இருக்கிறான்?
ஏதோ ஒரு நினைப்பில்
"எப்படியும் அவள் வருவாள்" என்று
அவள் ஏன் அப்படி சிரிக்கிறாள் ?
காத்திருப்பு பட்டியலில் 
"மேலும் ஒருவனை சேர்த்துவிட்டோம்" என்று . 

994.மறக்க முடியுமா

உன்னை
"மறக்க வேண்டும்"  "மறக்க வேண்டும்" 
என்று சொல்லிக்கொண்டே
நினைத்துக் கொண்டிருக்கின்றேன்.

995.ஆசை

"சிறு வயதில் இருந்தே 
எனக்கு இந்த ஆசை உண்டு 
வானத்து நிலா  பூமி வருமா! என்று 
அந்த ஆசை இன்று தான் நிறைவேறியது
என் காதலியை கண்டேன்! நிலா ரூபமாய்"

Thursday, November 18, 2010

996.நேரம்

அங்கும் இங்கும் அலைந்து திரிந்து 
எப்படியோ  ஒரு கடிகாரம் வாங்கினேன் 
நேரம் சரியில்லை என்றார் வீட்டு ஜோசியர் !

Wednesday, November 17, 2010

997.உன் சிரிப்பில்

"அள்ளிச் செல்ல  ஆளில்லை
அவள் சிரித்து விழுந்த முத்துக்களை " 

Tuesday, November 16, 2010

998.நம்பிக்கை

"நீ என்ன சிறு கல்லா! இல்லை 
சிற்பியிடம் இல்லாத கல் 
உன்னை வெறும் புல்லென நினைத்து  
ஏன் வேதனைப்படுகிறாய் ?
புல்லின் எழுச்சி கூட புரட்சியை ஞாபகப்படுத்தும் 
விடியல் வரும் வரை காத்திரு
வெற்றி நிச்சயம்."

Monday, November 15, 2010

999.ஹைகூ :


"நிற்கும் போதே பறக்கிறேன் 
நினைவில் நீ இருப்பதால்"

1000.ஹைகூ :



"ஊரெல்லாம் உறங்கிய நேரத்தில்
உறங்காமல் தெருவிளக்குகள் "