Friday, September 6, 2013

913.மறக்க முடியாமல்

நடிக்கத்... 
தெரியாத எனக்கு !....
 நன்றாக...
நடிக்கக்.... 
கற்றுக் கொடுத்து  விட்டாய்  !

இப்போது...

உன்னை.... 
மறந்தது போல் 
தினமும்.... 
நடித்துக் கொண்டிருக்கின்றேன் !

914.பேரழகு

நீ.... 
அழகாக இருக்கிறாய் ! 
என்பது.... 
எனக்கு தெரியும் 

ஆனால்... 
பேரழகு ! ....  
என்பதை...... 
றிந்து கொண்டேன் !

தரை நோக்கி 
நீ.... 
வெட்கப்படும்போது !

Tuesday, September 3, 2013

915.இரு தலை ராகம்

உன்னை நானும்
என்னை நீயும்
காதலிப்பது....
உனக்கும் தெரியும் !
 எனக்கும் தெரியும்  !

அப்படி இருந்தும்....
 இருவரும்...
 சொல்லிக்கொள்ளவில்லை
சொல்லாமலே பிரிந்தோம் !

என்னால்...
உன்னிடம்....
இன்று சொல்ல முடிந்தது
இது மட்டும் தான் !

"என் இனிய திருமண நல் வாழ்த்துகள்"  

Sunday, September 1, 2013

916.முத்தம்

என் ...
பிரம்மச்சரிய நாடகத்திற்கு 
முற்றுப்புள்ளி 
வைத்துவிட்டது !

கன்னத்தில்
நீ ....
கொடுத்த முத்தம் !