Thursday, December 29, 2011

நான் Song 1

ஏதோ ஒரு தப்பைச் செய்தாய் 
ஆனால் அதில் குற்றம் இல்லை 
பாலைவன பறவைக்கும் தாகம் உண்டு

போடு ஒரு ஆட்டம் போடு
பலமா ஒரு பாட்டும் பாடு
காகிதத்தில் கப்பல் செய்த காலம் போச்சு    (ஏதோ ......)

நதியோடு சேராத துளியெல்லாம் 
கடலோடு சேர்ந்தாலும் 
உப்பாகி மழையாகும்   

பாவங்கள் செய்யாத ஆளில்லை 
நீதியை நினைக்காதே 
நேரத்தை ஒட்டாதே                                             (ஏதோ .....)
          
 

Monday, December 26, 2011

நான் Song 2

போடா முன்னேறிப் போடா
இதுதான் உன் பாதை தாண்டா
மானம் கெட்டு வாழ்ந்தது போதுமடா

பாதை நீ செல்லும் பாதை
எல்லாம் அவன் செய்த லீலை
கண்ணீர் சிந்தி அழுததும் போதுமடா       (போடா......)

ஏக்கங்கள் கண்ணோரம் தூக்கங்கள்
உள்ளூறும்   சோகங்கள்
உனைவிட்டுப் பறந்தோடும்
     

ஓடாமல் ஓட்டங்கள் தொடரதே 
உள்ளங்கை ரேகை போல்
பாதையை மாற்றதே                                    (போடா.....)

Friday, December 16, 2011

960.என் கனவு

"உன்னைப்பற்றிய கனவுகள் 
என்னைக் கொள்ள ஆரம்பித்து விட்டன!
இறப்பதற்கு நான் பயப்படவில்லை 
என் இறப்பிற்கு -நீ 
அர்த்தம் கொடுப்பதாய் இருந்தால்" 

Tuesday, December 6, 2011

961.நீயே கவிதை

"உன்னைப்பற்றிக்  கவிதை சொல்ல

யோசிக்கத் தேவையில்லை

உன் பெயரை வாசித்தாலே போதும் "

Saturday, December 3, 2011

962.விடை கொடு

"உன்னை வழியனுப்ப
என் கண்களுக்கு தைரியம் இல்லை 
விழிமூடிக் கொள்கிறேன்
விடை கொடு"

Tuesday, November 22, 2011

963.கடவுளுக்கே வெளிச்சம்

ஒன்றும் கேட்காத கடவுளுக்கு
கோடியில் அர்ச்சனை !
பிச்சை கேட்கும் மனிதருக்கோ 
சில்லரை தட்சணை  !      

Wednesday, November 16, 2011

964.மௌனமாய்

"ஆண்மை" என்று நினைத்துக்கொண்டு 
அவளை அடித்து விட்டேன்!
அவள்  அழவில்லை !
திருப்பி அடிக்கவும் இல்லை!
மௌனமாய் இருந்து
என்னை கொன்று விட்டாள் .

Wednesday, November 2, 2011

965.மை

பேனாவில் மை இல்லை- ஆனால் 
கவிதை எழுதுகிறேன் 
"காதல் மயக்கத்தில்"

966.கிறுக்கள்

எத்தனை முறை படித்தாலும் 
எதுவும் புரியவில்லை
இருந்தும் ரசிக்கிறேன்
"குழந்தையின் கிறுக்கள்" 

Tuesday, October 25, 2011

967.கைதி

"அடிக்கடி கோபம் வருகிறது
அவசரமாய் எடுத்த முடிவை நினைத்து 
சிறையில்  ஆயில் தண்டனை கைதி! "

Tuesday, October 18, 2011

968.பாவம் அவன்

"பாவம் அவள் அவன் 
பைத்தியமாய் அலைகிறான்  
பழகிய நாட்களை நினைத்து "



Friday, October 14, 2011

969.என்ன சொல்ல

"நான் என்ன சொல்ல
நடக்கும் நாடகத்தில்
நானும் ஒரு நடிகனெ
இருக்கும் இறைவன்
எங்கோ இருந்து -நம்மை
மாற்றி வைத்து விளையாடுகிறான்
காயங்கள் தருகிறான் !
காரணம் தேடினால் -அதற்கு
காரணம் ஆகிறான் !
நான் என்ன சொல்ல ......"

Tuesday, October 11, 2011

970.அவளை நான்

"அவளை நான் காதலிக்கிறேன்
என் கண்களை திருடியதால்-அல்ல 
என் மனதை வருடியதால்"

Saturday, October 1, 2011

971.கட் அவுட்

சாலையின் இரு புறமும் 
வாகனச் சத்தம்-அதன் ஓரமாய் 
ஒரு படத்தின் கட் அவுட்
"சத்தம் போடாதே"  

Friday, June 24, 2011

972.அறம் செய்

"சிவப்பாகட்டும் நம் கைகள் !
 முழுச் சிவப்பாகட்டும் நம் கைகள் !
உடல் தோள் சிகப்பாக
இருக்க வேண்டியதில்லை!
 அரிதாரம் கொண்டு
 பூச வேண்டியதில்லை !
தவறுதலாய் காயம்
ஏற்பட வேண்டியதில்லை!
 கொலைகாரக் கையாய்
இருக்க வேண்டியதும் இல்லை !
பிறர்  "கண்ணீர் துடைத்தும்"
அவர் "கவலை போக்கியும்"
சிவப்பாகட்டுமே நம் கைகள்!
முழுச் சிவப்பாகட்டுமே நம் கைகள் ! "
                         

Wednesday, April 27, 2011

973.அவ்வளவுதான்

"தவறாக நினைத்து விடாதே
ஒன்றும் செய்யவில்லை நான்
பொய்யாக நடிக்கும்
உன் இதயத்திடம் 
என் காதலைச் சொல்லிப் 
புரிய வைத்தேன் 
அவ்வளவுதான்"

Tuesday, April 19, 2011

974.மெலுகாய் நான்

நன்றாக தெரியும் அவளுக்கு !
மெலுகாய் நான் உருகுகிறேன் என்று  !-இருந்தும் 
விடாமல் பார்த்து கொண்டே இருக்கிறாள் 
என்னை !     

Sunday, March 27, 2011

975.உன்னுள்ளே

உன்....
ஒவ்வொரு கேள்விக்கான பதில்களும் 
உன்னுள்ளே புதைந்து கிடக்கின்றன
உன்னை நீயே கேட்டுப்பார்
பதில்கள் கிடைக்கிறதோ இல்லையோ
கேள்விகள் என்பதே இல்லாமல் போகும் .

Monday, February 21, 2011

976.இறைவன் சொற்படி!


நோக்கம் ஒன்றே எல்லோருக்கும்
"பணம் சம்பாதித்தால் நல்லாயிருக்கும் "
செல்லும் நாட்கள் இப்படியே !
எல்லாம் இறைவன் சொற்படியே ! .

Thursday, February 17, 2011

977.யார் அவள்?

"முதல் பார்வையில்
என்னை மூழ்கடித்தவள் !
முன்னிரவில் முணுமுணுக்கச் செய்தவள் !
கொஞ்சும் பேச்சில் கொள்ளையடித்தவள்  !
செல்லச் சிரிப்பில் சினுங்குபவள் !
அவள்தான் -ஆமாம் 
அவளேதான் !

என் அக்காள் மகள் "அனிதா  "
வயது "இரண்டு"  "  

Friday, January 28, 2011

978.சீக்கிரமாய் வந்து விடாதே !

"சீக்கிரமாய் வந்து விடாதே!
உனக்காக காத்திருக்கும் போதுதான் -உன்மேல் 
காதல் அதிகமாகிக்கொண்டே செல்கிறது  "


Thursday, January 20, 2011

979.பண்டமாற்றம்

 "பண்டம் மாற்றும் முறை 
உணவில் மட்டும் தானா !
நம் இதயங்கள் 
இடம் மாறினால் என்ன ?    "


Tuesday, January 18, 2011

980.மயக்கம்

"என் மகுடி மனசு 
மயங்கியே கிடக்கிறது 
உன் மகரந்தச் சிரிப்பிற்கு  "

Monday, January 17, 2011

981.காதல் பைத்தியம்

"உன்னை மறந்து போகச் செய்துவிடு 
"காதல்" பைத்தியம் முற்றுவதற்குள் " 

Thursday, January 13, 2011

982.மாற்றம்

"ஒரு மாற்றம் உருவாக 
ஒரு கோடி ஆண்டு வேண்டாம்
நம் மனதில் சிறு விதையாய்
நல் எண்ணம் வந்தால் போதும்"

Friday, January 7, 2011

983.ஏற்றத்தாழ்வு

"என் முன் சென்ற பெண்ணை
பின் தொடர்ந்தேன் !
வந்தது ரயில்
அவள் "first class"ல் !
நான் "second class"ல் !"