Friday, January 25, 2013

927.காதல் நோய்

படிச்சா போதுமா  !
பைத்தியம்....
புடிச்சா தீருமா !

சிரிச்சும் பார்த்துட்டேன் !
இரவுல ...

அழுதும் பார்த்துட்டேன் !
 

கண்முழி பிதுங்குது !
தலையுல .....
நரைமுடி தொடங்குது !
 

சிரிக்கிற ஏனடி !
உன்னை ....
நினைக்கிறேன்  நானடி !
 

அலட்டுற ஏனடி !
மச்சான் .....
மனசுல நீயடி !
 

இரவுல படுக்குறேன்
தூக்கம் ....

வருவது இல்லையே !

விடுகதை போலவே 
குழப்பம் ....
தலையை சுத்துதே !

விபத்துகள் இருந்தும் 
மனம் ....
உன்னையே விரும்புதே !

விலகிய நாளிலும் 
மனதில் ....
உன்னையே விதைக்கிறேன் !

அறுவடை செய்திடு !
இல்லை ....
ஆளையே.....
கொன்று விடு !

No comments:

Post a Comment