Monday, November 3, 2014

893.தேடல்















ஆளை விட்டுத் தேடிப் பார்த்தேன் !
அக்கம் பக்கம் சுற்றிப் பார்த்தேன் !
மலைமேல் ஏறி குதித்துப் பார்த்தேன் !
மௌனமாய் சற்றே பேசிப் பார்த்தேன் !
நிற்காமல் ஓடிப் பார்த்தேன் !
தலைகீழாகவும் நின்று பார்த்தேன் !
பணத்தை கொஞ்சம் சேர்த்துப் பார்த்தேன் !
பசியால் கொஞ்சம் வாடியும் பார்த்தேன் !
அங்கும் இல்லை நிம்மதி !
இங்கும் இல்லை நிம்மதி !
எங்கும் இல்லை நிம்மதி !
அட...
எதிலும் இல்லை நிம்மதி !
பிறகு .....
கண்ணை கொஞ்சம் மூடிப் பார்த்தேன் !
உள்ளே கொஞ்சம் உற்றுப் பார்த்தேன் !
என்னுள் இருக்குது நிம்மதி !
அதை..
வெளியே தேடுது என் மதி !

No comments:

Post a Comment