Monday, December 2, 2013

905.உன் கையில் நான்

என்....
கைகளை பிடித்துக்கொண்டு 
நீ.... 
நடக்கும்பொழுது !

என்.. 
கால்களுக்கோ !

எந்த திசையில் போகிறோம் 
என்பதே தெரியவில்லை 

கண்களுக்கோ.. 

இது கனவில்லை !
என்பதை உறுதி செய்ய 
இமைகளும்... 
அடிகடி தொட்டுக் காட்டுகிறது ! 

இதயமும்.. 

சற்று வேகமாகவே  
துடிக்க ஆரம்பித்து விடுகிறது!

ஆனால்... 

இந்தக் குழப்பமெல்லாம் !

என்... 
கைகளுக்குக் கிடையாது ! 

ஏனென்றால்.... 

அதுதான்

" சொர்க்கத்தில் " இருக்கிறதே !

No comments:

Post a Comment