Thursday, October 6, 2016

873.தங்கை மகளுக்காக


பத்து மாசம் 
பொறுத்திரு மருமகளே!

பொன்னான உலகம் 
உனக்காக காத்திருக்கு!

நீ ...
வந்து சேரப்போற இடம்
சொா்க்கத்தோட மறு இடம்!

உன்ன ...
பொறுப்பா பாத்துக்க
தங்கம் போல 
அம்மா இருக்கா!

ஓடி விளையாடி
உலகத்த தொிஞ்சுக்க
மொத்த சொந்தமும்
இருக்கு!

இன்பம் மட்டுமே
உனக்கு சொந்தமா
இருக்கும்!

துன்பம் வந்தா
அத தாங்கிக்க

மாமன்...
நான் இருக்கேன்...

மருமகளே...

பயப்படாதே...

மொத்த சொந்தமும்
உனக்காக காத்திருக்கு
தோழ் கொடுக்க

மாமன் ..
நான் இருக்கேன்
உயிரையும் கொடுக்க...

No comments:

Post a Comment