Tuesday, June 7, 2016

879.வா மழையே




நெத்தியில விழுந்த
மழைத் துளியே!
உன்னப் பாா்க்க
ரொம்ப நாளா
இங்க காத்துக் கெடக்கோம்!

ஆறு, ஓட எல்லாம்
இங்க வறண்டு கெடக்கு!
தொண்டத்தண்ணி மட்டும் தானே
இங்க மி்ச்சமிருக்கு!.

ஊருக்குள்ள நெறயப் பேரு
உயிர விட்டாக -அதுல மிச்சமா
நாங்க இ்ங்க
கருகி நிக்கிறோம்.

பட்டிணியப் போக்க
இங்க வந்தியோ! - இ்ல்ல
பஞ்சங்கள தீக்க
மழைத்துளியா வந்தியோ!

சத்தியமா ...

உன்ன நாங்க
வீணடிக்க மாட்டோம்!
பத்திரமா சேத்து வச்சு
வெள்ளாம செஞ்சிடுவோம்!


எஞ்சிய உன்ன
பாகுபாடில்லாம பக்கத்து
ஊருக்கும் கொடுப்போம்!
பஞ்சமில்லாம வாழ்வோம்!

No comments:

Post a Comment